பாகிஸ்தான் விமான நிலையத்திற்கு வெளியே டேங்கர் வெடித்து விபத்து
7 ஐப்பசி 2024 திங்கள் 09:31 | பார்வைகள் : 6208
பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே டேங்கர் ஒன்று வெடித்ததாக பொலிசாரும், மாகாண அரசாங்கமும் தெரிவித்துள்ளன.
இதில் 4 பேர் காயம் அடைந்தனர், பல வாகனங்கள் சேதமடைந்தன. ஆனால் சிந்து மாகாண உள்துறை மந்திரி ஜியா உல் ஹசன் உள்ளூர் தொலைக்காட்சியான ஜியோவிடம் கூறுகையில், இது வெளிநாட்டினர் மீதான தாக்குதல் என தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோவில் கார்கள் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்து அடர்த்தியான புகை எழுவதும் பதிவானது. கராச்சி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
தொடர்ந்து அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் விமான நிலையம் அருகே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025


























Bons Plans
Annuaire
Scan