Paristamil Navigation Paristamil advert login

இருளில் மூழ்கும் ஈஃபிள் கோபுரம்..!!

இருளில் மூழ்கும் ஈஃபிள் கோபுரம்..!!

7 ஐப்பசி 2024 திங்கள் 16:47 | பார்வைகள் : 6226


இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் மேற்கொண்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்கிறது. 

இரவு 11.45 மணி அளவில் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு, கோபுரம் இருளில் மூழ்கும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்தார்.

ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் 54 பிரெஞ்சு நபர்களும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்