இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன்
7 ஐப்பசி 2024 திங்கள் 16:54 | பார்வைகள் : 3260
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நடந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் (Recep Tayyip Erdogan) எச்சரித்துள்ளார்.
காசா பகுதியில் பாலஸ்தீன பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் போர் வெறி தாக்குதலை தொடங்கி இன்றோடு (அக்டோபர் 7) ஓராண்டை எட்டியது.
"ஒரு வருடமாக நடந்து வரும் மற்றும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இந்த படுகொலைக்கு இஸ்ரேல் விரைவில் அல்லது பின்னர் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.
அவர் இஸ்ரேலிய பிரதம மந்திரி நெதன்யாகுவை ஹிட்லருடன் ஒப்பிட்டு அவரை "காசா கசாப்புக்காரன்" என்று அழைத்தார்.