Paristamil Navigation Paristamil advert login

செல்போன் தொலைந்துவிட்டால் Automatic Lock! புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் கூகுள்

செல்போன் தொலைந்துவிட்டால் Automatic Lock! புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் கூகுள்

8 ஐப்பசி 2024 செவ்வாய் 09:13 | பார்வைகள் : 246


Theft Detection Lock என்ற புதிய அம்சத்தை கூகுள் அனைத்து செல்போன்களிலும் கொண்டுவர உள்ளது. 

ஜியோமி 14T Pro ஆண்ட்ராய்டு செல்போனில் Theft Detection Lock எனும் பாதுகாப்பு அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம் செல்போன் தொலைந்துபோனால் உங்களது தனிப்பட்ட Data பாதுகாக்கப்படும். 

இந்த அம்சத்தை கூகுள் ஆண்ட்ராய்டு 10 மற்றும் புதிய வடிவ ஸ்மார்ட்போன்கள் என அனைத்திலும் கொண்டுவர உள்ளது. இதில் Offline device lock, Remote lock என்ற மேலும் இரண்டு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.  

உங்களது செல்போனை யாராவது பறித்து சென்றால், இந்த புதிய Theft detection lock Activate ஆகிவிடும். அத்துடன் Machine learning model மூலம் திருடிய நபர் சென்ற இடத்தை தேடும்.

இந்த அம்சம் Activate ஆகிவிட்டால் செல்போன் Automatic ஆக lock ஆகி, உங்களது தனிப்பட்ட Data பாதுகாக்கப்படும்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்