கனடாவின் வழமைக்கு மாறாக கூடுதல் எண்ணிக்கையில் பொலிஸ் பாதுகாப்பு
8 ஐப்பசி 2024 செவ்வாய் 10:03 | பார்வைகள் : 2253
கனடாவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தி ஓராண்டு பூர்த்தியாகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு நிகழ்வுகள் கனடாவின் நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தாக்குதல் சம்பவத்தில் 1200 இஸ்ரேலிய பிரஜைகள் கொல்லப்பட்டதுடன் 240 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்தனர்.
இதன் பின்னர் இஸ்ரேல் காசா மீது நடத்திய தாக்குதல்களில் இதுவரையில் 41000 மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் ஒரு லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் கனடாவின் பிரதான நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹமாஸ் போராளிகள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்ரேல் ஆதரவு தரப்புகள் கோரும் அதேவேளை, போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பலஸ்தீன ஆதரவு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வழமைக்கு மாறாக கூடுதல் எண்ணிக்கையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.