ஈரானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் - நிபுணர்கள் சந்தேகம்
8 ஐப்பசி 2024 செவ்வாய் 09:35 | பார்வைகள் : 2664
ஈரானில் திடீரென நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்ட நிலையில், அது ஈரான் அணுகுண்டு சோதனை நடத்தியதால் ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரானிலுள்ள Semnan மாகாணத்தில், இம்மாதம், அதாவது, ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் அது 4.5ஆக பதிவானது. விடயம் என்னவென்றால், அந்த நிலநடுக்கம் பதிவான இடத்துக்கு அருகில்தான் ஈரானின் அணு உலை ஒன்று அமைந்துள்ளது.
ஏற்கனவே இஸ்ரேலுடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் அணுகுண்டு தயாரிக்கக்கூடும் என நிபுணர்கள் பலர் எச்சரித்திருக்க, இந்த நிலநடுக்கம் ஈரான் அணுகுண்டு சோதனை நடத்தியதால் ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.