முல்லைத்தீவில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

8 ஐப்பசி 2024 செவ்வாய் 12:13 | பார்வைகள் : 9584
முல்லைத்தீவு, முள்ளியவளை நகர் பகுதியில் வீதியில் வைத்து மாணவி ஒருவரின் தங்க நகை அறுக்கபட்ட சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுவாகல் பகுதியில் இருந்து முள்ளியவளை நகரிற்கு வகுப்பிற்காக உயர்தர மாணவி ஒருவர் சென்றுள்ளார்.
குறித்த மாணவி வகுப்பினை முடித்து விட்டு பேருந்து நிலையம் நாேக்கி நடந்து சென்ற போது முள்ளியவளை பிராந்திய சுகாகார சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மாணவி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாணவியால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதனையடுத்து மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3