Paristamil Navigation Paristamil advert login

Aubervilliers : ஆறு துப்பாக்கிகள் - 4 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது..!!

Aubervilliers : ஆறு துப்பாக்கிகள் - 4 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது..!!

8 ஐப்பசி 2024 செவ்வாய் 13:59 | பார்வைகள் : 3123


Aubervilliers நகரில் உள்ள வீடொன்றில் இருந்து ஆறு துப்பாக்கிகளும், நான்கு கிலோ கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இச்சம்பவம் rue Léopold Rechossière வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குறித்த வீதியில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கைமாற்றப்படுவதை அவதானித்து விட்டு, சந்தேக நபர் ஒருவரை பின் தொடர்ந்தனர். சந்தேகநபர் அங்குள்ள வீடொன்றுக்குள் நுழைந்துள்ளார். அதை அடுத்து மேலும் சில காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவரது சுற்றிவளைக்கப்பட்டு உள்ளே நுழைந்து தேடுதல் மேற்கொண்டனர்.

அதன்போது, அங்கிருந்து ஆறு கைத்துப்பாக்கிகள், பல்வேறு அளவுகள் கொண்ட கலிபர் வகை துப்பாக்கிகளுக்கான சன்னங்கள்  மற்றும் 4.5 கிலோ கஞ்சா போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
 
அவ்வீட்டில் வசிக்கும் இருவர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்