Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி!

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி!

8 ஐப்பசி 2024 செவ்வாய் 14:18 | பார்வைகள் : 3193


பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த சுஹைல் ஹுசைனி, ஹிஸ்புல்லா அமைப்பின் தளவாடங்கள், வரவு செலவுத் திட்டம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து நவீன ஆயுதங்களை கொண்டு வந்து, அவற்றை வெவ்வேறு ஹிஸ்புல்லா பிரிவுகளுக்கு விநியோகிப்பதில் ஹுசைனி ஈடுபட்டதாகவும், அவர் ஹிஸ்புல்லா ராணுவ கவுன்சிலில் உறுப்பினராக இருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்