Paristamil Navigation Paristamil advert login

மஞ்சள் வீரன் படத்தில் பிக்பாஸ் பிரபலமா?

மஞ்சள் வீரன் படத்தில் பிக்பாஸ் பிரபலமா?

8 ஐப்பசி 2024 செவ்வாய் 14:18 | பார்வைகள் : 1652


’மஞ்சள் வீரன்’ படத்தின் படப்பிடிப்பில் டிடிஎப் வாசன் சரியாக கலந்து கொள்ளவில்லை என்றும் அதனால் அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக இயக்குனர் செல்அம் என்பவர் கூறிய நிலையில், அதற்கு டிடிஎஃப் வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

"மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து விலக வேண்டும் என்று என்னிடம் சொல்லி இருந்தால், நானே விலகி இருப்பேன். ஆனால் படப்பிடிப்பை நடத்தாமலேயே நான் படப்பிடிப்புக்கு வரவில்லை என்று கூறியது மிகப்பெரிய தவறு. மலிவான விளம்பரத்திற்காக என்னுடைய பெயரை அவர் பயன்படுத்தியது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, இது போன்ற ஒரு பச்சை துரோகத்தை நான் பார்த்ததே இல்லை, என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் ’மஞ்சள் வீரன்’ படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் நடிக்க இருப்பதாகவும், அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. கூல் சுரேஷ் இதுவரை காமெடி படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதை அடுத்து அவரது நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்