Paristamil Navigation Paristamil advert login

பொதுத்தேர்தலில் 3.4 மில்லியன் பேர் பதிலாள் மூலம் வாக்களித்தனர்!

பொதுத்தேர்தலில் 3.4 மில்லியன் பேர் பதிலாள் மூலம் வாக்களித்தனர்!

9 ஐப்பசி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 2278


வாக்குரிமை உள்ள பிரெஞ்சு நபர்கள் தேர்தல் நடைபெறும் போது வெளிநாடுகளிலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களினால் வாக்களிக்கும் மையத்துக்கு செல்ல முடியாதவர்களுக்கு என ‘பதிலாள் வாக்கு’ எனும் ( voté par procuration) முறை உள்ளது. ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் வாக்களிப்பே இந்த முறையாகும்.

சென்ற ஜூன் 30, ஜூலை 7 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற `பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 3.4 மில்லியன் பேர் இதுபோன்று பதிலாள் மூலமாக வாக்களித்துள்ளனர். இந்த எண்ணிக்கை முன்னர் எப்போதும் பதிவாகாத அதிகூடிய எண்ணிக்கையாகும். பிரெஞ்சு வாக்காளர்கள் தொகையில் இது 7% சதவீதமாகும்.

பிரெஞ்சு பொது தேர்தலுக்கு முன்னதாக, மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஐரோப்பிய தேர்தலின் போது 1.8% சதவீதமான பிரெஞ்சு மக்கள் (874,000 பேர்) இதுபோன்று பதிலாள் மூலம் வாக்களித்தனர்.



INSEE நிறுவனம் இத்தகவலை நேற்று ஒக்டோபர் 8 ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்