Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : வாகனம் மோதி பெண் பலி.. சாரதி கைது!

பரிஸ் : வாகனம் மோதி பெண் பலி.. சாரதி கைது!

9 ஐப்பசி 2024 புதன் 12:47 | பார்வைகள் : 11389


பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வானகம் ஒன்று மோதியதில் 72 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார். வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 அளவில் இச்சம்பவம் Rue Manin வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் வேகமாக பயணித்த ட்ரக் பார ஊர்தி ஒன்று பாதசாரி கடவை ஒன்றில் நடந்து சென்ற குறித்த பெண்ணை மோதி தள்ளி அவர் மீது ஏறிச் சென்றுள்ளது. வாகனத்துக்குள் சிக்குண்ட அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். SAMU மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

வாகன சாரதி கைது செய்யப்பட்டார். மதுபோதை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் மதுபானம் அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் எந்த ஒரு கண்காணிப்பு கமராக்களும் இல்லாத நிலையில், விபத்து குறித்த விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்