Paristamil Navigation Paristamil advert login

துணை உங்களை ஏமாற்றுவது போல தெரிகிறதா..?

துணை உங்களை ஏமாற்றுவது போல தெரிகிறதா..?

9 ஐப்பசி 2024 புதன் 14:37 | பார்வைகள் : 220


நம்முடைய துணை நம்மை ஏமாற்றுவதை நிச்சயமாக எவராலும் பொறுத்துக் கொள்ள இயலாது. ஆனால் இது மாதிரியான விஷயங்களை ஒருவரால் தவிர்க்கவும் இயலாது. மேலும் இதுபோன்ற திருமணத்தை மீறிய உறவுகள் ஒரே இரவில் ஏற்படக்கூடியவை அல்ல. தற்போதைய உறவில் நீண்ட காலமாக நீடித்து வரும் ஒரு சில சிக்கல்கள் காரணமாகவே திருமணத்தை மீறிய உறவுகள் ஏற்படுகின்றன. திருமணத்தை மீறிய உறவுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தீராத சண்டைகள் : எந்த ஒரு உறவிலும் சண்டைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அது நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்தால் அது பல்வேறு மோசமான விளைவுகளை உண்டாக்கும். எந்த ஒரு சண்டையும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்தால் அது ஒருவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

அர்த்தமற்ற வாக்குவாதங்கள் ஒருவருக்கொருவர் மனம் திறந்து வெளிப்படையாக பேசிக் கொள்வது எந்த ஒரு உறவையும் வலுப்படுத்துவதற்கு உதவும். ஆனால் நம்முடைய துணையுடன் பேசுவதற்கு எந்த ஒரு விஷயமும் இல்லாமல் போகும் தருணம் ஏற்பட்டால் அது நிச்சயமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
மனதளவில் நெருக்கம் இல்லாமல் போவது ஆரம்பத்தில் இருந்த நெருக்கம் நாளடைவில் குறைய தொடங்கும் பொழுது ஏதோ ஒரு தவறு ஏற்பட்டு இருப்பதை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும். உங்களுடைய துணையுடன் மனதளவில் உங்களுக்கு எந்த ஒரு நெருக்கமும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் அந்த இடத்தில் காதல் இல்லை என்பதை அது உணர்த்துகிறது.

நேர்மையாக இல்லாமல் இருத்தல் : முழுமையாக வெளிப்படையாக நேர்மையாக ஒருவருக்கொருவர் இருப்பதே ஒரு உறவின் அடிப்படைத் தேவையாக அமைகிறது. நம்முடைய துணையுடன் இருந்து எந்த ஒரு விஷயத்தை நாம் மறைக்க துவங்கும் அந்த இடத்தில் தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. நாம் விரும்பக்கூடிய ஒருவருடன் நாம் வாழும் வாழ்க்கையானது ஆர்வமூட்டும் சாகசத்தை தினமும் வாழ்வது போல தான். ஆனால் மாறாக உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு சந்தோஷமும் இல்லாமல் முழுக்க முழுக்க வேலை சார்ந்ததாக இருந்தால் நிச்சயமாக அதனை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.

எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி சந்தேகத்தோடு கட்டாயமாக நீண்ட நாட்கள் அந்த உறவை கொண்டு செல்ல முடியாது. ஒரு வேளை உங்கள் துணை மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதனை தெளிவுப்படுத்திக் கொண்டு மேற்கொண்டு அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். இதுவே உறவில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் நல்லது. பிரச்சினைகளை கவனிக்காமல் செல்வதால் அது பெரிதாக வெடிப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே ஆரம்பத்திலேயே பிரச்சனையை கண்டறிந்து அதனை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுங்கள். இது கணவன் மனைவி உறவுக்கு மட்டுமல்லாமல் எந்த ஒரு உறவுக்கும் பொருந்தும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்