Bobigny என்றால் இது தான் அர்த்தமா..?!!
5 பங்குனி 2020 வியாழன் 10:30 | பார்வைகள் : 19218
நமக்கு மிகவும் பரீட்சையமான இந்த நகரம் குறித்து பல தகவல்களை பிரெஞ்சு புதினத்தில் வாசித்திருப்பீர்கள்... இன்றைய பிரெஞ்சு புதினத்தில் Bobigny நகரின் பெயர் காரணம் குறித்து பார்க்கலாம்...
பொபினி எனும் பெயர் ரோமானிய காலத்தில் (Roman-period) தோன்றியது. ரோமானிய காலத்தில் இந்த நகரம் மிக விசாலமான நெருக்கடியற்ற ஒரு 'கிராமமாக' இருந்தது. பொபினியை ஒரு கிராமமாக நினைத்துப்பார்க்க முடியுமா??!
<<Balbiniacum>> எனும் ரோமானிய வார்த்தையில் இருந்து மருவியது தான் Bobigny எனும் பெயர்.
Balbiniacum என்றால் என்ன அர்த்தம்...??
இந்த வார்த்தையில் உள்ள Balbo அல்லது Balbinus அல்லது Balbinius எனும் வார்த்தைகளுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் 'ஊமை' அல்லது 'அமைதியான' என அர்த்தம். குறிப்பாக ஆண்களை குறிக்கின்றது இந்த வார்த்தை.
அதாவது 'அமைதியான ஆண்கள்' வசிக்கும் நகரம் பொபினி. ஒருவேளை ரொமானிய காலத்தில் ஆண்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்களோ... என்னவோ..??!!