Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல்- இருளில் மூழ்கிய மாகாணம்

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல்- இருளில் மூழ்கிய மாகாணம்

10 ஐப்பசி 2024 வியாழன் 08:53 | பார்வைகள் : 9062


அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியபோதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர்.

புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. 

இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி சென்ற சூறாவளி வலுவிழந்தது.

சூறாவளியின் தீவிரம் குறைந்தபோதும், அதிக ஆபத்து ஏற்படுத்தும் பிரிவிலேயே மில்டன் வைக்கப்பட்டு உள்ளது. 

ஆர்லேண்டோவுக்கு தென்மேற்கே 60 மைல்கள் தொலைவில் சூறாவளி மையம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனால், புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரத்தில் செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் சிலர் உயிரிழந்து இருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சூறாவளி தாக்கியதில் நேற்றிரவு 11 மணியளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர்.

இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மீட்பு பணியிலும் பாதிப்பு ஏற்பட கூடும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்