நிரம்பி வழியும் Grand Morin ஆறு..எச்சரிக்கை தொடர்கிறது!
10 ஐப்பசி 2024 வியாழன் 11:08 | பார்வைகள் : 1659
நேற்றைய தினம் பிரான்சைக் கடந்த Kirk புயலின் பாதிப்பு இன்று ஒக்டோபர் 10, வியாழக்கிழமையும் தொடர்கிறது.
இன்று வியாழக்கிழமை காலை Grand Morin ஆற்றின் நீர்மட்டம் 3.52 மீற்றர் பதிவானது. முன்னதாக 2016 ஆம் ஆண்டில் பதிவான நீர்மட்டத்தை விட 10 செ.மீ அதிகமாகும். 2016 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி 3.42 செ.மீ நீர்மட்டம் பதிவானது.
இன்று இரண்டாவது நாளாக அங்கு மழை தொடர்வதால் மேலும் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை காலை அங்கு பாடசாலை போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தன.