ஹெஸ்புல்லா அமைப்பு மேற்கொண்ட ரொக்கட் தாக்குதல் - இஸ்ரேலின் வடபகுதியில் இருவர் பலி

10 ஐப்பசி 2024 வியாழன் 11:17 | பார்வைகள் : 7862
இஸ்ரேலின் வடபகுதி மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் மேற்கொண்ட ரொக்கட் தாக்குதல் காரணமாக இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் வடபகுதியை நோக்கி 150க்கும் அதிகமான ரொக்கட்கள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிரியாட் ஸ்மோனா என்ற எல்லைபகுதி நகரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ரொக்கட் சிதறல்கள் காரணமாக 40 வயது மதிக்கத்தக்க இருவர் காயமடைந்தனர் பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என இஸ்ரேலிய தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஹெஸ்புல்லா அமைப்பு இந்த நகரில் உள்ள இஸ்ரேலிய படையினரை இலக்குவைத்ததாக தெரிவித்துள்ளது.
கிரியாட் ஸ்மோனா நகரிலிருந்து இஸ்ரேல் பெருமளவிற்கு பொதுமக்களை வெளியேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹெஸ்புல்லா அமைப்பினருடனான மோதல் தீவிரமடைந்த பின்னர் இஸ்ரேலிய பிரஜைகள் கொல்லப்பட்டுள்ள முதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரொக்கட் சிதறல்கள் காரணமாக இந்த நகரின் பல பகுதிகளில் தீ மூண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1