Paristamil Navigation Paristamil advert login

■ Kirk புயல் - ‘சிவப்பு’ எச்சரிக்கை - ஒருவர் பலி.. அனர்த்தம் தொடர்கிறது..!

■ Kirk புயல் - ‘சிவப்பு’ எச்சரிக்கை - ஒருவர் பலி.. அனர்த்தம் தொடர்கிறது..!

10 ஐப்பசி 2024 வியாழன் 14:51 | பார்வைகள் : 2469


நேற்று புதன்கிழமை ஆரம்பித்த Kirk புயலின் தாக்கம், இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. Eure-et-Lior மற்றும் Seine-et-Marne ஆகிய இரு மாவட்டங்களுக்கும் அதிகபட்சமான "சிவப்பு" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து நாளை ஒக்டோபர் 11, வெள்ளிக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கும்படியும் Météo France அறிவுறுத்தியுள்ளது. Seine-et-Marne மாவட்டத்துக்கு இன்று இரண்டாவது நாளாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, Orne, Sarthe, Deux-Sèvres, Vendée மற்றும் Aisne ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Pyrenees நகரில் அதிகபட்சமாக நேற்று மணிக்கு 211 கி.மீ வேகத்தில் புயல் பதிவாகியிருந்தது. மர முறிவுகள், வாகனங்களை வெள்ளம் அடித்துச் சென்றிருந்தமை போன்ற அனர்த்தங்கள் பதிவாகியிருந்தது. படகோட்டி ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்