Paristamil Navigation Paristamil advert login

RATP குழுமத்துக்கு மீண்டும் தலைவரானார் Jean Castex!!

RATP குழுமத்துக்கு மீண்டும் தலைவரானார் Jean Castex!!

10 ஐப்பசி 2024 வியாழன் 15:42 | பார்வைகள் : 6096


RATP போக்குவரத்து சேவைகளுக்கு முன்னாள் பிரதமர் Jean Castex மீண்டும் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி முதன் முறையாக RATP குழுமத்துக்கு அவர் தலைவராக அறிவிம்கப்பட்டார். ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அவரை அப்பதவிக்கு பரிந்துரை செய்திருந்தார். வரும் நவம்பர் மாதத்துடன் அவரது இரண்டுவருட கால சேவை நிறைவுக்கு வருகிறது. இந்நிலையில், புதிய தலைவராக மீண்டும் அவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின் படி அவர் மீண்டும் தலைவரையாக தேர்தெடுக்கப்படுவதற்கு ஆதரவாக வாக்குகள் பெறப்பட்டது. அதை அடுத்து, அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவரே தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்