அவதானம்... ஒட்டுமொத்த périphérique வீதிக்கும் வேகக்கட்டுப்பாடு!!
10 ஐப்பசி 2024 வியாழன் 19:00 | பார்வைகள் : 3151
சுற்றுவட்ட வீதி என அழைக்கப்படும் périphériqu சாலையில், ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து மணிக்கு 50 கி.மீ வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டிருந்தது. முதற்கட்டமாக ஒரு பகுதிக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், இன்று ஒக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து ஒட்டுமொத்த சாலைக்கும் இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
Porte de Châtillon முதல் Porte de Bagnolet வரை இந்த வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த périphérique வீதியில் சுற்றி வருவதற்கு இனிமேல் 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்டுப்பாட்டை மீறி அதிக வேகமாக பயணிப்பவர்களுக்கு இன்றில் இருந்து குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 கி.மீ தூரம் உள்ள இந்த சாலையை பரிஸ் நகரசபை பராமரிக்கிறது. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கொண்டுவந்திருந்த திட்டத்தின் படி இந்த வேகக்கட்டுப்பாடு 70 இல் இருந்து 50 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.