அரசின் "Logement d'abord" திட்டம்! - 600,000 பேருக்கு தங்குமிட வசதி!!
10 ஐப்பசி 2024 வியாழன் 20:00 | பார்வைகள் : 4013
கடந்த 2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட Logement d'abord எனும் திட்டத்தினால், 600,000 அகதிகளுக்கு தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடமைப்பு அமைச்சர் (ministre du Logement) Valérie Létard இதனை இன்று ஒக்டோபர் 10, வியாழக்கிழமை அறிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 600,000 அகதிகளுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளன. 'மிகவும் மகிழ்ச்சியான செய்தி!' என அவர் மேலும் தெரிவித்தார்.
கூடாங்களிலும், மேம்பாலங்களின் கீழும், பூங்காக்கள், மெற்றோ சுரங்கங்களிலும் உறங்கிக்கொண்டிருந்த அகதிகள் மற்றும் வீடற்றவர்களுக்கு (SDF) இந்த "Logement d'abord" எனும் திட்டம் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.