காங்., ஆதரவு இல்லாமல் காஷ்மீரில் ஆட்சி
11 ஐப்பசி 2024 வெள்ளி 11:08 | பார்வைகள் : 777
கூட்டணியாக போட்டியிட்டாலும் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா ஆட்சி அமைக்கவுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஹரியானாவில் பா.ஜ., மீண்டும் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காஷ்மீரில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது, தொங்கு சட்டசபை அமையும் , கூட்டணி கட்சிகள் ஆதரவுடனே ஆட்சி அமைக்க முடியும் என கணிப்புகள் சொல்லியது. ஆனால் தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளை பிடித்துள்ளது.
மொத்தம் 90 தொகுதிகளில் 46 ல் வெற்றி பெற்றால்தான் பெரும்பாண்மை ஆகும். இதனால் காங்., ஆதரவுடன் உமர் அப்துல்லா கூட்டணி ஆட்சி அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் பயார் லால்ஷர்மா, சதீஷ்சர்மா, சவுத்ரிமுகம்மது, ராமேஸ்வர்சிங் ஆகிய 4 பேர் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து காங்., தயவு இல்லாமல் தேசியமாநாட்டு கட்சி ஆட்சி அமைக்கிறது. காங்., தரப்பில் 6 எம்எல்ஏ.,க்கள் இருந்தாலும் உமரை எந்த ' டார்ச்சரும்' கொடுக்க முடியாது.