'UNIFIL' அமைதிப்படை மீது இஸ்ரேல் தாக்குதல்.. 'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது!' என மக்ரோன் சீற்றம்!!
11 ஐப்பசி 2024 வெள்ளி 17:29 | பார்வைகள் : 3496
லெபனானில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையினரை (ஆங்கிலத்தில் : Unated Nations Interim Force in Lebanon) இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உடடியான கண்டனம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தெரிவித்தார்.
"நாங்கள் அதைக் கண்டிக்கிறோம், அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம், இனியும் இப்படி நடப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!" என திட்டவட்டமாக இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
தற்போது சைப்ரஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அவர், அங்கு வைத்தே இதனைத் தெரிவித்தார்.
லெபனானின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் நான்கு UNIFIL படையினர் காயமடைந்துள்ளனர்.