Paristamil Navigation Paristamil advert login

ஆபத்தான உடல் உறவில் இளையோர் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது! WHO பிரான்சிலும் அதே நிலமை! சுகாதர அமைப்பு.

ஆபத்தான உடல் உறவில் இளையோர் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது! WHO பிரான்சிலும் அதே நிலமை! சுகாதர அமைப்பு.

8 புரட்டாசி 2024 ஞாயிறு 07:37 | பார்வைகள் : 3224


இளம் பருவத்தினரிடையே ஆணுறை பயன்படுத்துவது குறைவாகவும், முறையாகப் பயன்படுத்தப்படுவதும்  குறித்து WHO கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள 42 நாடுகளின் நிலைமையைப் ஆராய்ந்த ஒரு ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில், 61% இளையோர்கள் தங்கள் கடைசி பாலியல் சந்திப்பின் போது ஆணுறை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர், இது 2014 இல் 70% ஆக இருந்தது. இளம் பருவத்தினரிடையே, அதே காலகட்டத்தில், விகிதம் 63ல் இருந்து 57% ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வறிக்கை வெளியான பின்னர் பிரான்சின் இரண்டாவது பெரும் நகரமான Lyon நகரில் உள்ள இளையோரிடத்தில் நேர்காணல்கள் நடத்தப்பட்டது அந்த நேர்காணலில் பல இளையோர் "தங்களின் பாலியல் உறவில் மாத்திரைகளோ, ஆணுறைகளோ பயன்படுத்துவது பற்றி அதிகம் சிந்திப்பதில்லை" என தெரிவித்துள்ளனர். 

பாதுகாப்பு அற்ற பாலுறவில் இளைஞ்ர்களை விடவும் யுவதிகளே அதிகம் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இளம் யுவதிகள் "மாத்திரைகளை, ஆண்ணுறைகளை தாங்கள் வைத்திருப்பது பல வழிகளில் தங்களுக்கு சங்கடமான நிலமைகளை ஏற்படுத்துவதால் அவ்வாறு ஏற்படுகிறது" என தெரிவித்துள்ளனர்.

முன்பைவிட தற்போது, தொற்றுநோய் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் அதிகமாக இருப்பதனால் இளையோர் இடையே பாலியல் உறவு, அதுசார்ந்த விளைவுகள், பாதிப்புகள், நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் குறைந்துள்ளமையே இந்த நிலைக்கு காரணம் என கூறும் பொது சுகாதார அமைப்புக்கள் மீண்டும் பாலியல் உறவு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை இளையோர் இடத்தில் அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்