புதிய பிரதமர் : மக்கள் கருத்து என்ன..?!
8 புரட்டாசி 2024 ஞாயிறு 12:00 | பார்வைகள் : 2728
பொது தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களின் பின்னர் நாட்டின் பிரதமராக Michel Barnier அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், புதிய பிரதமர் தொடர்பில் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் 'கலவையான' முடிவுகளே வெளியாகியுள்ளன.
பிரதமராக Michel Barnier இனை 23% சதவீதமானவர்கள் விரும்புவதாகவும், 24% சதவீதமானவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், 26% சதவீதமானவர்கள் பிரதமரை எங்களுக்கு அவரைத் தெரியவில்லை எனவும், 16% சதவீதமானவர்கள் அவர் தொடர்பில் கருத்துக்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பை le point ஊடகத்துக்காக Cluster17 எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.