வெளிநாடு ஒன்றில் உயரமான மாடியிலிருந்து விழுந்து இலங்கை இளைஞன் உயிரிழப்பு

8 புரட்டாசி 2024 ஞாயிறு 12:14 | பார்வைகள் : 5294
கம்போடியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
லக்ஷபான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், அவர், கடந்த மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரமான உயரமான மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் நான்காம் திகதி பணி நிமித்தம் அவர் கம்போடியாவிற்கு சென்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், அவரது உடல் நாட்டுக்கு கொண்டு வரப்படுமா அல்லது கம்போடியாவில் தகனம் செய்யப்படுமா என்பது குறித்து உறவினர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.