ஜெயிலர் பட வில்லன் விநாயகன் அதிரடி கைது...
8 புரட்டாசி 2024 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 1300
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகர் விமான நிலையத்தில் போதையில் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் விநாயகன் வில்லனாக கலக்கியிருப்பார். அவரது மலையாளம் கலந்த பேச்சு மற்றும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் விநாயகன் கேரளாவில் இருந்து கோவா செல்லும் வழியில் இணைப்பு விமானத்தை பிடிப்பதற்காக ஹைதராபாத்தில் இருந்தார். அப்போது அவரை ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்ள சிஐஎஸ்எப் அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர் மது அருந்தியதாக தெரிய வந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் விநாயகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளை விநாயகன் தாக்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து விநாயகனை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் சிசிடிவி காட்சியை வேண்டுமானாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் விநாயகன் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.