சினிமாவில் அறிகுகமாகிறார் பாலகிருஷ்ணாவின் மகன்!
8 புரட்டாசி 2024 ஞாயிறு 14:19 | பார்வைகள் : 1341
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகம் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாகவும் இந்த படத்திற்கு ’சிம்பா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ’ஹனுமான்’ படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் அனுமான் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மோக்ஷக்னா பிறந்த நாளில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் திரையுலகிற்கு வருகை தரும் புது ஹீரோவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் பிரசாந்த் வர்மா தனது எக்ஸ் பக்கத்தில், ‘பாலகிருஷ்ணா அவர்களின் ஆசியுடன் அவரது மகனை எனது படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.