சிரியா மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்
9 புரட்டாசி 2024 திங்கள் 08:44 | பார்வைகள் : 6887
மத்திய சிரியாவின் பல பகுதிகளை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இஸ்ரேல் தொடர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 4 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில், 13 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர், அத்துடன் நகரின் பல பகுதியில் தீக்கிரையாகி உள்ளதாக அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் மேற்கு ஹமாஸ் மாகாணத்தில் உள்ள Masyaf தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், 4 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய சிரியாவின் பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ராக்கெட் தாக்குதலை சிரிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பல புள்ளிகளில் எதிர் கொண்டு தடுத்து நிறுத்தியது.
பிரித்தானியாவை தளமாக கொண்ட போர் கண்காணிப்பாளரான சிரிய மனித உரிமை கண்காணிப்பகம், இஸ்ரேல் தாக்குதலின் ஒருப்பகுதி Maysaf பகுதியில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்தை குறிவைத்து இருந்ததாக தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் எத்தகைய தகவலையும் உடனடியாக வழங்கவில்லை.


























Bons Plans
Annuaire
Scan