அமெரிக்க வரலாற்றில் அதிக விடுமுறை எடுத்த ஜனாதிபதி...
9 புரட்டாசி 2024 திங்கள் 09:21 | பார்வைகள் : 2118
அமெரிக்க வரலாற்றில் அதிக விடுமுறை எடுத்த ஜனாதிபதி என்கிற அவப்பெயரை ஜோ பைடன் பெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார்.
81 வயதான ஜோ பைடன் பதவியேற்று 1326 நாட்கள் ஆகிவிட்டதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அதில், ஜோ பைடன் 794 நாட்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில், 40 சதவீத விடுமுறை எடுத்துள்ளார்.
ஒவ்வொரு 10 நாட்களுக்கும் 4 நாட்கள் விடுமுறை எடுப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவில், ஒரு நபருக்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 11 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
அதன்படி, ஒரு சராசரி அமெரிக்கர் 4 ஆண்டுகளில் பைடன் எடுத்த விடுமுறைக்கு சமமான விடுமுறையை எடுக்க 48 ஆண்டுகள் ஆகும்.
அமெரிக்க வரலாற்றில் எந்த ஜனாதிபதியும் எடுக்காத அதிகபட்ச விடுமுறை இதுவாகும். முன்னதாக, டிரம்ப் தனது பதவிக்காலத்தில் 1461 நாட்களில் 26% அதாவது 381 நாட்களை எடுத்துக் கொண்டார்.
பராக் ஒபாமா மற்றும் ரொனால்ட் ரீகன் ஆகியோர் தங்கள் மொத்த பதவிக்காலத்தில் வெறும் 11% மட்டுமே விடுமுறையில் இருந்தனர். ஜிம்மி கார்ட்டர் ஜனாதிபதியாக 79 நாட்கள் மட்டுமே விடுமுறை எடுத்தார்.