13 ஆயிரம் அடி உயர மலையை ஏறி சாதனை படைத்த 6 வயது பிரித்தானிய சிறுமி
9 புரட்டாசி 2024 திங்கள் 09:15 | பார்வைகள் : 937
பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி செரன் பிரைஸ் (Seren Price), 13,600 அடி உயரமுள்ள மவுண்ட் டூப்கல் மலையை ஏறி சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம், குழந்தையாக இருந்தபோது தனது உயிரைக் காக்க உதவிய பெக்ஹிங்ஹாம் குழந்தைகள் மருத்துவமனைக்கு நிதி திரட்டியுள்ளார்.
செரன் ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் ஆட்லாஸ் மலைகளில் உயரமான இந்த டூப்கல் மலையில் ஏறிய மிக இளையவர் என்கிற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தான் பிறந்தபோது சுவாசத்தில் பிரச்சனை கொண்டிருந்ததாகவும், இந்த மருத்துவமனை தான் தன்னை காப்பாற்றியதாகவும், அதற்கு நன்றி தெரிவிக்கவே அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
செரன் மற்றும் அவரது தந்தை கிளின் பிரைஸ், Moroccoவுக்கு சென்று, கடுமையான வெப்பத்தில் 8 மணி நேரம் நடைபயணம் செய்து மவுண்ட் டூப்கல் மலை அடிவாரத்தை அடைந்தனர்.
வெப்பம் அவர்களுக்கு மிகப்பாரிய சவாலாக இருந்தது என்றாலும், மலை உச்சிக்கு சென்றபோது மகிழ்ச்சி அளித்ததாக செரனின் தந்தை தெரிவித்தார்.
இது மட்டுமல்லாமல், செரன் 2022ல் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மூன்று உயரமான மலைகளையும் 48 மணிநேரத்துக்குள் ஏறி, மற்றொரு சாதனையை படைத்துள்ளார்.
அடுத்த சவாலாக, செரன் மேற்கு ஐரோப்பாவின் உயரமான Mont Blanc மலையை ஏறத் திட்டமிட்டுள்ளார்.