ஐபோனின் செயற்கை நுண்ணறிவு.. பிரான்சுக்கு வருவதில் தாமதம்..!!
9 புரட்டாசி 2024 திங்கள் 19:14 | பார்வைகள் : 4635
சற்று முன்னர் Apple நிறுவனம் தங்களது புதிய இலத்திரனியல் சாதனங்களை அறிமுகம் செய்துவைத்தது.
புதிய ஐபோன்களை அறிமுகம் செய்துவைத்த அப்பிள் நிறுவனம், அதில் புதிய வசதியாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்டிப்பதையும், அது பயன்படுத்தப்படும் விதத்தையும் அறிமுகம் செய்து வைத்தது. செப்டம்பர் 20 ஆம் திகதி விற்பனைக்கு வரும் 16 சீரீஸ் தொலைபேசிகளில் இந்த செயற்கை நுண்ணறிவு வசதி இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த வசதி பிரான்சுக்கு இவ்வருடம் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே பிரான்சில் (பிரெஞ்சு மொழியில்) பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. iOS 18.2 பதிப்பிலேயே இந்த வசதி பிரான்சுக்கு கொண்டுவரப்படும் என அறிய முடிகிறது.
16 ஐபோன் €699 யூரோக்கள் முதல், 16 Pro Max ஐபோன்கள் €1,199 யூரோக்கள் முதல் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.