Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் இருந்து இலங்கை சென்றவரின் பரிதாப நிலை

ஜேர்மனியில் இருந்து இலங்கை சென்றவரின் பரிதாப நிலை

10 புரட்டாசி 2024 செவ்வாய் 13:09 | பார்வைகள் : 6302


ஜேர்மன் நாட்டில் இருந்து தனது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு விடுமுறைக்கு வந்திருந்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன், இவரின் மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

யாழ். - உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். 

நீண்ட காலமாக ஜேர்மன் நாட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையை கழிக்க தனது சொந்த ஊருக்கு திரும்பி இருந்தார். 

கடந்த சனிக்கிழமை (08)  மனைவியுடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்ற வேளை விபத்தில் சிக்கி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். 

இருவரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று  திங்கட்கிழமை குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

மேலும், அவரது மனைவி தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்