Paristamil Navigation Paristamil advert login

தோல்வியில் முடிந்த காதல் பற்றி தமன்னா....

தோல்வியில் முடிந்த காதல் பற்றி தமன்னா....

10 புரட்டாசி 2024 செவ்வாய் 14:08 | பார்வைகள் : 4538


ரசிகர்களால் மில்க் பியூட்டி என அழைக்கப்படுபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானாலும் , அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் கல்லூரி. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கல்லூரி படத்தின் வெற்றிக்கு பின்னர் கமர்ஷியல் ரூட்டுக்கு தாவிய தமன்னா, தமிழில் விஜய்க்கு ஜோடியாக சுறா, அஜித்துடன் வீரம், ரஜினியுடன் ஜெயிலர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தார்.

அண்மையில் தமிழில் தமன்னா நடிப்பில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இதேபோல் பாலிவுட்டில் அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஸ்ட்ரீ 2 திரைப்படமும் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்தது. இதனால் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என திரும்பிய பக்கமெல்லாம் தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

நடிகை தமன்னாவும், இந்தி நடிகர் விஜய் வர்மாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஆரம்பத்தில் சீக்ரெட்டாக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த ஆண்டு தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த ஆண்டு இந்தியில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் தமன்னாவும், விஜய் வர்மாவும் ஜோடியாக நடித்திருந்தனர்.

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்தபோது தான் தமன்னா, விஜய் வர்மா இடையே காதல் மலர்ந்தது. அதற்கு முன்னர் வரை ஹீரோக்களுடன் லிப்கிஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டு வந்த நடிகை தமன்னா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் அந்த கண்டிஷன்களையெல்லாம் தளர்த்தி தன் காதலனுடன் லிப் கிஸ் காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்