Paristamil Navigation Paristamil advert login

Val-de-Marne : கத்திக்குத்தில் மனைவி பலி.. கணவர் கைது..!

Val-de-Marne : கத்திக்குத்தில் மனைவி பலி.. கணவர் கைது..!

10 புரட்டாசி 2024 செவ்வாய் 14:23 | பார்வைகள் : 12352


மனைவியை கத்தியால் குத்தி கொன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Val-de-Marne மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Limeil-Brévannes ( Val-de-Marne ) நகரில் இச்சம்பவம் நேற்று செப்டம்பர் 9, திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கதின் முடிவில், நபர் ஒருவர் சமையலறைக் கத்தி ஒன்றினால் மனைவியை குத்திக்கொன்றுள்ளார். மனைவியின் சகோதரி ஒருவரையும் தாக்கியுள்ளார்.

பின்னர் அவர் தற்கொலைக்கு முயன்றபோது அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.

அவரின் மனைவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை. சடலம் உடற்கூறு பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக Seine-et-Marne மாவட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அவரது மனைவியினால் குத்திக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்