பரிஸ் நகர தண்ணீர் - போத்தலில் அடைத்து விற்பனை!
12 புரட்டாசி 2024 வியாழன் 08:58 | பார்வைகள் : 3069
பரிஸ் நகர குழாய் தண்ணீரை போத்தலில் அடைத்து விற்பனை செய்ய நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பரிசில் முதன் முறையாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
BE WTR எனும் நிறுவனத்துக்கே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குழாய் தண்ணீரில் உள்ள குளோரின் மற்றும் ஏனைய மாசுபடுத்தும் உலோகங்கள் என்வற்றை நீக்கி, கண்ணாடி போத்தலில் அடைத்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்கள். குறிப்பாக உணவங்கள், விடுதிகள், பெரும் நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து விற்பனை செய்யப்பட உள்ளன..
நெகிழி எனப்படும் ப்ளாஸ்டிக் போத்தல்களின் பயன்பாட்டை குறைக்கும் நோக்கோடு இந்த கண்ணாடி போத்தல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்காக குறித்த நிறுவனம் 1 பில்லியன் யூரோக்களை செலவிட்டுள்ளது.
பரிஸ் முழுவதும் ஒரே தண்ணீரை மக்கள் பயன்படுத்தவேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள் என தெரிவித்துள்ளனர். பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் அவர்கள் மிகப்பெரிய அளவில் சேமிப்பகம் ஒன்றையும் நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.