Paristamil Navigation Paristamil advert login

மின்சாரக் கட்டண உயர்வை பிற்போட்ட எரிசக்தி ஆணையம்..!

மின்சாரக் கட்டண உயர்வை பிற்போட்ட எரிசக்தி ஆணையம்..!

12 புரட்டாசி 2024 வியாழன் 09:13 | பார்வைகள் : 986


இந்த ஒக்டோபர் மாதத்தில் மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் கட்டண உயர்வு பிற்போடப்பட்டுள்ளதாக  எரிசக்தி ஆணையம் (Commission de régulation de l’énergie) அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலயே மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும், கிட்டத்தட்ட 5% சதவீதத்தால் அதிகரிப்புக்கு உள்ளாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை பிரான்சில் மின்சாரக்கட்டணம் 43% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் பின்னர் சராசரியாக குடும்பம் ஒன்று வருடத்துக்கு €1,800 தொடக்கம் €2,000 யூரோக்கள் வரை மின்சாரக்கட்டணம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்