Paristamil Navigation Paristamil advert login

அவதானம் 'suisses au chocolat' உணவுப் பொருட்கள் உடலுக்கு ஆபத்து.

அவதானம் 'suisses au chocolat' உணவுப் பொருட்கள் உடலுக்கு ஆபத்து.

12 புரட்டாசி 2024 வியாழன் 09:50 | பார்வைகள் : 4157


பிரான்ஸ் முழுவதும் உள்ள 130 Lidl பல்பொருள் அங்காடிகளில் கடந்த செப்டம்பர் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை விற்பனை செய்யப்பட்ட 'suisses au chocolat' சுவிஸ் சாக்லேட் ரொட்டிகளில் மரத்தூள் கலந்திருப்பதாக 'Rappel conso' எனும் அரச உணவுக் கட்டுப்பாடு அமைப்பு தன் இணையத்தளத்தில் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மேற்குறிப்பிட்ட 'suisses au chocolat' உணவுப் பொருள்களை உட்கொண்டால் தொண்டைக்குழியில் காயங்கள்' இரைப்பையில் சமிபாடின்மை, வயிற்றுப்போக்கு போன்ற விளைவுகள் ஏற்படலாம் என 'Rappel conso' தன் இணையத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளது.

தயாரிப்பு தொகுதி எண் இல்லாமல் விற்கப்பட்ட குறித்த உணவுப்பொருளை கொள்வனவு செய்தவர்கள் செப்டம்பர் 21ம் திகதி வரை திருப்பி செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்