Paristamil Navigation Paristamil advert login

Évry-Courcouronnes : வணிக வளாகத்தில் தீ.. கல்லூரி, பாடசாலை பாதிப்பு..!

Évry-Courcouronnes : வணிக வளாகத்தில் தீ.. கல்லூரி, பாடசாலை பாதிப்பு..!

13 புரட்டாசி 2024 வெள்ளி 07:38 | பார்வைகள் : 5152


Évry-Courcouronnes நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ பரவியதை அடுத்து, அருகில் உள்ள கல்லூரி மற்றும் பாடசலை ஆகியவற்றில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று செப்டம்பர் 12 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. அங்குள்ள Thorigny வணிக வளாகத்தில் திடீரென தீ பரவியது. Avenue de la Garenne வீதியில் உள்ள இந்த கட்டிடத்தில் தீ பரவியதை அடுத்து, அருகில் உள்ள கல்லூரி ஒன்றிலும், பாடசாலை ஒன்றிலும் இன்று காலை கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டன. 

தீயணைப்பு படையினர் வேகமாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்