இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி
13 புரட்டாசி 2024 வெள்ளி 15:59 | பார்வைகள் : 10016
2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தமது X தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.


























Bons Plans
Annuaire
Scan