கருப்பை புற்றுநோய்க்கு புதிய நிவாரணம், மகிழ்ச்சியில் மருத்துவ உலகம்.
15 புரட்டாசி 2024 ஞாயிறு 06:30 | பார்வைகள் : 3638
பிரான்சில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3000 பெண்கள் கருப்பை புற்றுநோய்க்கு ஆளாகின்றனர், இவர்களில் ஏறத்தாழ 850 பெண்கள் கடுமையான பாதிப்பை சந்திக்கின்றனர், அதிலும் இளம் பெண்களும் அடங்குவர். என மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.
"கருப்பை புற்றுநோய்க்கு தற்போது கீமோதெரபி, ரேடியோதெரபி முறைச் சிகிச்சைகளே வழங்கப்பட்டு வருகிறது, இவை போதுமானதாக இல்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலம் மிகக் குறைவாகவே இருக்கிறது" என தெரிவிக்கும் புற்றுநோய் மருத்துவத்துறை தலைவர் Coralie Marjollet, மேற்குறிப்பிட்ட சிகிச்சைகளுடன் 'இம்யூனோதெரபி' எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை அளிக்கும் போது நோயாளிகளின் ஆயுட்காலம் 8% அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
"இதுவரை இந்த சிகிச்சை முறையின் தரவுகள் மூன்று ஆண்டுகளுக்குள் உள்ளது இன்னும் இரண்டு ஆண்டுகளின் பின்னர் சிகிச்சை முறையில் மேம்பட்ட நிலை ஏற்படும்" என தெரிவித்துள்ள மருத்துவத்துறை, இதுவரை இந்த சிகிச்சை முறைக்கு அரச மருத்துவ குடுப்பனவு இல்லை என்றும் காலப்போக்கில் அதுவும் சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளது.