Paristamil Navigation Paristamil advert login

ஆற்றில் திடீரென கவிழ்ந்த படகு - 64 விவசாயிகள்  பலி

ஆற்றில் திடீரென கவிழ்ந்த படகு - 64 விவசாயிகள்  பலி

15 புரட்டாசி 2024 ஞாயிறு 13:49 | பார்வைகள் : 5120


நைஜீரியாவில் ஜம்பாரா மாநிலத்தில் உள்ள ஆற்றில் படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக நாளாந்தம் ஆற்றினை கடந்து செல்கிறார்கள்.

அந்த வகையில் 70 பேர் படகில் சென்ற போது திடீரென ஆற்றில் கவிழ்ந்ததில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாகவும் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்