இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பேச்சு
15 புரட்டாசி 2024 ஞாயிறு 13:55 | பார்வைகள் : 1412
இந்திய அணியில் தன்னுடைய பணி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பவுலிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்..
டேல் ஸ்டைனுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் பவுலிங் தாக்குதலை வழிநடத்திய மோர்கெல், தற்போது இந்தியாவின் பவுலிங் வரிசையை வலுப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சென்னையில் தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மோர்கெல் தனது பணியை தொடங்குகிறார்.
கௌதம் கம்பீர் தலைமையிலான ஐபிஎல் அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட மோர்கெல், இந்திய வீரர்களின் திறமைகளை நன்கு அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற உலகத்தரமான வீரர்கள் இருப்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என மோர்கெல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அணியை முன்னின்று வழி நடத்துவார்கள், நான் அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுப்பது என்னுடைய வேலை என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய வீரர்களுக்கு தேவையான இடங்களில் எனது அனுபவத்தை கொடுப்பதும் என்னுடைய வேலையாகும் என மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.