Paristamil Navigation Paristamil advert login

ஈரானிய அதிகாரிகள் மீது  தடையை நீடிக்கும் கனடா!

ஈரானிய அதிகாரிகள் மீது  தடையை நீடிக்கும் கனடா!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 05:40 | பார்வைகள் : 3407


கனடிய அரசாங்கத்தினால் ஈரானியா அதிகாரிகள் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் சிரேஷ்ட அதிகாரிகள் மீது கனடிய அரசாங்கம் தடை விதித்திருந்தது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி ஈரானிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த இரண்டு அதிகாரிகள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரனிய அரசாங்கம் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்ப்டடுள்ளது.


ஈரானிய புரட்சி பாதுகாப்பு பாதுகாப்பு படையை தீவிரவாத இயக்கமாக கடந்த ஜூன் மாதம் கனடா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்