ஒலிம்பிக், பரா ஒலிம்பிக் : பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரம்!
.jpg)
17 புரட்டாசி 2024 செவ்வாய் 07:47 | பார்வைகள் : 9184
ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக இடம்பெற காரணமாக இருந்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார பணிகள் நாளை செப்டம்பர் 18, புதன்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.
”Merci” எனும் ஒற்றை வார்த்தையுடன் கூடிய பதாகைகள், சுவரொட்டிகளை நாளை முதல் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கும். இதற்காக 1,500 சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன. 350 இடங்களில் அவை ஒட்டப்பட உள்ளன. மேலும் 1,100 இடங்களில் பதாகைகளும் நிறுவப்பட உள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், “உலக மக்களை பரிசுக்கு வரவேற்கிறோம் எனும் தொனிப்பட ”la bienvenue à Paris au monde entier” எனும் வார்த்தைகளை அச்சிட்டு இதுபோல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1