Paristamil Navigation Paristamil advert login

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்: கோவா அபார வெற்றி!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்: கோவா அபார வெற்றி!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 1188


டாக்டர் (கேப்டன்) கே திம்மப்பையா நினைவு போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

KSCA Invitational தொடரில் கோவா மற்றும் கர்நாடக அணிகள் மோதிய போட்டியில் ச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன் டெண்டுல்கர்  இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 26.3 ஓவர்களில் 87 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


இதன் மூலம் KSCA தொடரில் கோவா அணி, கர்நாடக அணியை 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் சிறப்பான செயல்திறனை காட்சிப்படுத்திய அர்ஜுன் டெண்டுல்கர், வரும் முதல்-வகுப்பு சீசனுக்கு தயாராகியுள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கர்  இதுவரை மூன்று வடிவங்களில் 49 போட்டிகள் விளையாடி, 68 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முதல்-வகுப்பு கிரிக்கெட்டில், 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்