Paristamil Navigation Paristamil advert login

■ பரிஸ் 13 : பாரிய வெடிப்புடன் கூடிய தீ.. தீயணைப்பு படையினர் குவிப்பு..!

■ பரிஸ் 13 : பாரிய வெடிப்புடன் கூடிய தீ..  தீயணைப்பு படையினர் குவிப்பு..!

17 புரட்டாசி 2024 செவ்வாய் 17:24 | பார்வைகள் : 9087


பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய வெடிப்பு சத்தத்துடன் தீ பரவியுள்ளது. வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து, கட்டிடம் தீப்பிடித்து எரிந்து வருகிறது. தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

13 ஆம் வட்டாரத்தின் Avenue de la Porte d'Ivry பகுதியில் உள்ள 6 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் கூரையில் இந்த வெடிப்பு சம்பவம் மாலை 5 மணிக்கு பதிவானது. பாரிய சத்தத்துடன் இரண்டு தடவைகள் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதை அடுத்து கூரை விளாசி எரியத்தொடங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடம் முற்று முழுதாக தடை செய்யப்பட்டு, தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த கட்டிடத்தின் 400 m2 சதுரமீற்றர் கொண்ட கூரை திருத்தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், அதன் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்