நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகளின் போது சிக்கிய பிரெஞ்சுக்கவிஞர் Joachim du Bellay கல்லறை!
18 புரட்டாசி 2024 புதன் 08:27 | பார்வைகள் : 3316
நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகளின் போது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு மறுமலர்ச்சிக் கவிஞர் Joachim du Bellay இல் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு தீவிபத்துக்குள்ளான இத்தேவாலாத்தின் திருத்தப்பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன. கடந்த 2022 ஆம் ஆண்டு அங்கு அத்திவாரமிடுவதற்காக பெரும் குழிகள் தோண்டப்பட்டன. அகழ்வாராய்ச்சியாளர்களின் மேற்பார்வையுடன் அவை தோண்டப்பட்டன. அதன் போது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தேசத்தின் அடையாளமாக திகழ்ந்த கவிஞர் மற்றும் ”La Pléiade” எனும் இலக்கியக்குழுமத்தை உருவாக்கிய Joachim du Bellay இன் கல்லறை கண்டறியப்பட்டது.
அவரது சடலம் 1560 ஆம் ஆண்டு நோர்து-டேம் தேவாலய தோட்டத்தில் புதைக்கப்பட்டபோது, மிக துல்லியமான அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. நீண்டகால மர்மமாக இருந்த இந்த கதை, கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியே தெரியவந்ததாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கவிஞர் Joachim du Bellay மிகச்சிறந்த குதிரைச்சவாரி வீரராவார். அவர் காசநோயுடன் அவதியுற்றிருந்தபோது பரிசில் இருந்து குதிரை ஒன்றில் ரோம் நகருக்குச் சென்றதாக வரலாற்று கதை உண்டு..