Paristamil Navigation Paristamil advert login

விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் வில்லனாக நடிக்கப்போவது  யார் தெரியுமா?

18 புரட்டாசி 2024 புதன் 12:02 | பார்வைகள் : 250


சில நாட்களுக்கு முன் "தளபதி 69" படத்தின் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய பேசுபொருளானது. மேலும் விஜயின் கடைசி படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கவுள்ளார்ஏற்கனவே "கத்தி", "பீஸ்ட்", "மாஸ்டர்", "லியோ" என 4 படங்களுக்கு இசையமைத்த அனிருத், தற்போது விஜயின் "தளபதி 69" படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை எச். வினோத் இயக்க, KVN தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளனர். படத்தில் சமந்தா, மமிதா பைஜூ, சிம்ரன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே என்றும், வில்லனாக பாலிவுட் பிரபல நடிகர் பாபி தியோல் நடிக்கவுள்ளார் என்றும் பல தகவல்கள் வெளியானது.

ஆனால், ஹீரோயின் மற்றும் வில்லன் நடிகர் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் "தளபதி 69" படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தகவலின்படி, "தளபதி 69" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்