Paristamil Navigation Paristamil advert login

பூண்டு சாதம்.

பூண்டு சாதம்.

18 புரட்டாசி 2024 புதன் 16:04 | பார்வைகள் : 270


பூண்டு சாதம் காரசாரமான சுவையில், சாப்பிடுவதற்கு ரொம்பவே டேஸ்ட்டாக இருக்கும். முக்கியமாக இந்த பூண்டு சாதம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது, ரொம்பவே சீக்கிரமாகவே செய்து முடித்து விடலாம். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. மதியம் உணவாக குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்கு இந்த பூண்டு சாதத்தை செய்து கொடுங்கள். அவர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். பேச்சிலர்கள் கூட இந்த பூண்டு சாதத்தை செய்யலாம். சரி வாங்க இப்போது இந்த பதிவில் பூண்டு சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பூண்டு சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப் ( உதிரியாக வடித்து எடுத்தது)
பூண்டு - 100 கிராம்
எண்ணெய் - 3 ஸ்பூன்
நெய் - 1 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

செய்முறை :

பூண்டு சாதம் செய்ய முதலில், எடுத்து வைத்த பூண்டை தோலுரித்து நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு அகலமான கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி சூடாக்கவும். அவை நன்றாக சூடானதும் அதில் பூண்டை போட்டு பொன்னிறமாக வறுக்கவும். கருகிவிடக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வருத்தப்பூண்டில் கொஞ்சம் மட்டும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

அடுப்பில் எண்ணெயும் பூண்டும் இருக்கும். எனவே அதில் சீரகம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதன் பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கேரட், பீன்ஸ், குடைமிளகாய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

காய்கறிகள் முக்கால் பதத்திற்கு வென்றவுடன் அதில் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக எடுத்து வைத்த சாதத்தை இதனுடன் சேர்ந்து நன்கு கிளறி விடுங்கள். பிறகு அதை 5 நிமிடம் அடுப்பில் அப்படியே வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வையுங்கள். இப்போது தனியாக எடுத்து வைத்த பூண்டை சாதத்தின் மேல் தூவி விடுங்கள். மேலும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையையும் தூவி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான பூண்டு சாதம் ரெடி.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்